ரே‌ஷன் அரிசி கடத்தியவர்கள் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிப்பு

பல்வேறு இடங்களில் ரே‌ஷன் அரிசி கடத்தியதாக மதுரையில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
ரே‌ஷன் அரிசி கடத்தியவர்கள் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிப்பு
Published on

மதுரை,

மதுரையில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர். அதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், மேலஅனுப்பானடியை சேர்ந்த சுப்புராஜ் மகன் ராஜபிரபு, தங்கராஜ் மகன் மணிகண்டன், சந்தைப்பேட்டை வெள்ளைய கிருஷ்ணன் மகன் சவுந்தர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன்முத்தூரை சேர்ந்த முருகேசபாண்டியன் மகன் சுபாகர் ஆகியோர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com