ராஜீவ் காந்திகொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் விளாத்திகுளம் வந்தார்

ராஜீவ் காந்திகொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் விளாத்திகுளம் வந்தார்
ராஜீவ் காந்திகொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் விளாத்திகுளம் வந்தார்
Published on

விளாத்திகுளம்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதனை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன்பட்டிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

அங்கு தனது தாய் ராஜேஸ்வரி வீட்டில் 30 நாட்கள் தங்குகிறார். இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் என மொத்தம் 20 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.

குடும்பத்தினரை தவிர மற்ற நபர்களை சந்திக்கக்கூடாது, பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com