பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி நாமக்கல், ராசிபுரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி நாமக்கல், ராசிபுரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி நாமக்கல், ராசிபுரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

நாமக்கல்,

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பா.ம.க சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பு செயலாளர் சுதாகர், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் ரமபிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை குறைக்க வலியுறுத்தியும் பா.ம.க.வினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்த்தப்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் பா.ம.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க.துணை பொதுச்செயலாளர் ஓ.பி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு துணை செயலாளர் பழனிவேல் கலந்துகொண்டார். மேற்கு மாவட்ட செயலாளர் சரவணராஜ் வரவேற்றார். மேற்கு மாவட்ட தலைவர் முத்துசாமி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன்ராஜ், மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தார். ராசிபுரம் நகர செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com