வறட்சி நிவாரண பணிகள் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு பெங்களூருவில் இன்று நடக்கிறது

முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு இன்று(செவ்வாய்க் கிழமை) பெங்களூருவில் நடக்கிறது. இதில் வறட்சி நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
வறட்சி நிவாரண பணிகள் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு பெங்களூருவில் இன்று நடக்கிறது
Published on

பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டாகள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் மண்டல கமிஷனர்களும் கலந்துகொள்கிறார்கள்.

கர்நாடகத்தில் 100 தாலுகாக்களில் நிலவும் வறட்சி குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கலெக்டர்களிடம் இருந்து குமாரசாமி விவரங்களை கேட்டு பெறுகிறார்.

விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கடந்த முறை நடந்த மாநாட்டின்போது, குமாரசாமி கூறினார். இந்த விஷயத்தில் கலெக்டர்கள் எடுத்த நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி விவரங்களை கேட்டு பெறுகிறார்.

வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர், கால்நடைகளுக்கு தீவனம், அந்த பகுதி மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்வதை தடுக்க வேலைகளை உருவாக்குதல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்-மந்திரி விவாதிக்க உள்ளார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்தி இருப்பது, புதிய திட்டங்களை தொடங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குமாரசாமி ஆலோசிக்க இருக்கிறார். இந்த மாநாட்டில் மந்திரிகள், தலைமை செயலாளர் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் முதன்மை செயலாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com