மாநில அந்தஸ்து தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இல்லை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

மாநில அந்தஸ்து தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
மாநில அந்தஸ்து தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இல்லை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
Published on

புதுச்சேரி,

கார்கில் வெற்றி தினவிழாவினையொட்டி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவு தூணுக்கு காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் கடற்கரையில் நடந்து வரும் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணியினை ஆய்வு செய்தனர்.

தற்போது நடந்து வரும் பணிகள் குறித்தும், அந்த பணிகள் எப்போது நிறைவுபெறும் என்றும் அங்கு பணியில் ஈடுபட்டவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். விரைவில் பணிகளை முடிக்குமாறும் அமைச்சர்கள் அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது.

புதுவைக்கு தனிமாநில அந்தஸ்து கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைந்து டெல்லிக்கு சென்று மத்திய மந்திரிகள், தேசிய அளவிலான கட்சி தலைவர் களிடம் கொடுத்துள்ளோம்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்பதில் எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. மாநில அந்தஸ்து வழங்கக்கோரி பாராளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் குரல் எழுப்புவார்கள். புதுவை அரசும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும். இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com