குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி அருகே குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் திடீரென முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
Published on

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எளாவூர் ஊராட்சியைச் சேர்ந்த ஆலப்பிள்ளை கண்டிகை, மதுக்கால் கிராமம், சின்னாரெட்டிகண்டிகை, ஆலமரத்துக்காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு சீரான குடிதண்ணீர் வினியோகம் கிடைப்பது இல்லை என்று தெரிகிறது. இதனையடுத்து குடிநீர் தட்டுப்பாட்டால் இப்பகுதி மக்கள் தினமும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று அலைந்து திரிந்து குடிதண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் தங்களுக்கு தட்டுபாடு இன்றி குடிதண்ணீர் கிடைத்திட ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி சாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிதண்ணீர் பிரச்சினையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி கூறினார். இதனையடுத்து பெண்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com