வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
Published on

திருவள்ளூர்,

திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் கழிவறை கட்டினர். கழிவறை கட்டி 6 மாதங்கள் ஆன பின்னரும் அதற்கான நிதிஉதவி வழங்கப்பட வில்லை. இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமரசப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com