புவனகிரி, விருத்தாசலம் பகுதியில் குடிமராமத்து பணிகள்

புவனகிரி, விருத்தாசலம் பகுதியில் குடிமராமத்து பணிகளை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
புவனகிரி, விருத்தாசலம் பகுதியில் குடிமராமத்து பணிகள்
Published on

பரங்கிப்பேட்டை,

புவனகிரி வட்டம் தச்சக்காடு, அருண்மொழிதேவன், சேந்திரங்கிள்ளை, வேளங்கிப்பட்டு, குமட்டிக்கொல்லை, வள்ளலார் ஓடை மற்றும் கிளை பாசன வாய்க்கால்கள் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை குடிமராமத்து திட்டம் 2020-21-ம் ஆண்டின் கீழ் ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன், பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அசோகன், அவைத்தலைவர் கோவி.ராசாங்கம், முன்னாள் நகர செயலாளர் சுந்தர், முன்னாள் ஆவின் தலைவர் சுரேஷ் பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர் ரெங்கம்மாள், கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் வீரபாண்டியன், தச்சக்காடு கோபு, உதவி பொறியாளர் அருளரசன், விவசாய சங்க பிரதிநிதிகள் குமார், மகாராஜன், சந்திரன், மோகன், குப்புசாமி, நிர்வாகிகள் மாரிமுத்து, சவுந்தரராஜன், சுதந்திரதாஸ் கோதண்டம், ராமசந்திரன், ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொதுப்பணித்துறை சார்பில் விருத்தாசலம் வயலூர் ஏரி ரூ.55 லட்சம் மதிப்பிலும், ஆலடி மற்றும் புலியூர் ஏரிகள் தலா ரூ.25 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்து பணி தொடங்கியது. இந்த பணிகளை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்.

வயலூரில் நடந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் வெங்கடேசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்திரகுமார், அவைத்தலைவர் தங்கராசு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், செல்வகணபதி, பா.ம.க. விவசாய அணி நிர்வாகி குப்புசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com