ரேஷன் கடைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி

திருப்பட்டினம் ரேஷன் கடைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பெண்கள் ஒப்பாரி வைத்து கும்மி அடித்தனர்.
ரேஷன் கடைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி
Published on

நாகூர்,

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தில் உள்ள ரேஷன் கடையில் கடந்த சில ஆண்டுகளாக அரிசி, கோதுமை, சீனி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சரிவர வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று நிரவி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை இறந்துவிட்டதாக கூறி கடைக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு மாநில துணை செயலாளர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். முன்னதாக திருப்பட்டினம் கடைத்தெருவில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலமாக பெரிய பள்ளி தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றனர். பின்னர் ரேஷன் கடைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஒப்பாரி வைத்து கும்மி அடித்தனர்

அப்போது திரளான பெண்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுது கும்மி அடித்தனர். இதில் தொகுதி செயலாளர் விடுதலைகணல், செய்தி தொடர்பாளர் சுரேஷ், துணை செயலாளர் மூர்த்தி, தொகுதி அமைப்பாளர்கள் இளம்பரிதி, மதிவாணன், கட்சியை சேர்ந்த மோகன்தாஸ், தாமோதரன், முத்தரசன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com