

நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கந்தன் தலைமை தாங்கினார். இதில் சசிகலா கலந்துகொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், துப்புரவு பணியாளர்கள் என 2 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று அங்கிருந்த பெண்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த சசிகலா, திடீரென கரண்டியை எடுத்து அடுப்பில் வெந்து கொண்டிருந்த சாதத்தை துழவி விட்டு சாதம் வெந்து விட்டது. அதனை இறக்கி வையுங்கள் என அந்த பெண்ணிடம் கூறினார். அப்போது சசிகலா பேசும்போது, வெள்ள பாதிப்பு குறித்து கேள்விப்பட்டு உங்களை பார்க்க வந்திருக்கிறேன். சென்னையில் வெள்ள பாதிப்பு எப்படி உள்ளது? என்பதை தெரிந்து கொண்டேன். என் வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. அதையும் தாண்டி, நீந்திதான் இங்கு வந்துள்ளேன். ஜெயலலிதா கூறியதை காப்பாற்ற என்னால் முடிந்ததை உங்களுக்கு செய்வேன் என்றார்.