

பழனி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், பெரும்பாலானோர் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பழனி முருகன் கோவில் தற்காலிக ஊழியர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவிக்கின்றனர்.
இதுகுறித்து அறிந்த பழனி போலீசார், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க முடிவு செய்தனர். அதன்படி 50 தற்காலிக ஊழியர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.