மழையால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்; கவிஞர் வைரமுத்து வழங்கினார்

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெற்றி தமிழர் பேரவை சார்பில் நிவாரணமாக உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே நேற்று நடந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்; கவிஞர் வைரமுத்து வழங்கினார்
Published on

இதில் சுமார் 500 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, சர்க்கரை, கோதுமை மாவு, ரவை, துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோப்பு உள்பட பல்வேறு வகையான பொருட்களை கவிஞர் வைரமுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., வெற்றித்தமிழர் பேரவை நிர்வாகிகள் டவுன்பஸ் வேலு, வி.பி.குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உணவுப்பொருள் வழங்கிய பிறகு கவிஞர் வைரமுத்து கூறியதாவது:-

உழைக்கும் மக்கள் இல்லையென்றால் சென்னைக்கு இயக்கம் கிடையாது. அதனால் அவர்களை பசிக்க விடமாட்டோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தமிழக அரசு தண்ணீரையும், கண்ணீரையும் துடைக்க பெரும்பாடுபட்டு வருகிறது. அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், போலீஸ் துறை, மின்சார துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். சென்னை மழை வெள்ளத்துக்கு நிரந்தர தீர்வுவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com