பவானி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்

பவானி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
பவானி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்
Published on

பவானி,

பவானி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 172 பேருக்கும், பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டிபாளையம், குருப்பநாயக்கன்பாளையம், சன்னியாசிபட்டி மற்றும் வரதநல்லூர் உள்பட 15 ஊராட்சிகளில் பணியாற்றும் 230-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கும் தலா 20 கிலோ அரிசி, 80 முட்டைகள், பருப்பு, எண்ணெய் வகைகள் மற்றும் மளிகை பொருட்கள் என ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.2 ஆயிரத்து 250 என மொத்தம் ரூ.9லட்சம் மதிப்பீட்டில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

மேலும் ஈரோடு மாவட்ட கூட்டுறவு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் முதன்முறையாக பவானி போலீஸ் நிலையம் எதிரே உள்ள தேவபுரம் நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடையில் ரூ.500 மதிப்பில் 19 வகையான மளிகை பொருட் களை வழங்கும் நிகழ்ச்சியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், பவானி நகராட்சி ஆணையாளர் பாரிஜான், பொறியாளர் கதிர்வேலு, துப்புரவு அலுவலர் சோலை ராஜா, ஆய்வாளர் செந்தில்குமார், பவானி நகர் மன்ற முன்னாள் தலைவர் எம்.ஆர்.துரை, துணை தலைவர் ராஜேந்திரன், அ.தி.மு.க. மாணவர் அணி சீனிவாசன் மற்றும் முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com