தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர் சரோஜா வழங்கினார்

சிங்களாந்தபுரம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் சரோஜா வழங்கினார்.
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர் சரோஜா வழங்கினார்
Published on

ராசிபுரம்,

ராசிபுரம் ஒன்றியத்தை சேர்ந்த சிங்களாந்தபுரம் ஊராட்சியில் சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், போடிநாய்க்கன்பட்டி, அரசபாளையம், கனகபொம்மன்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள், முட்டை வழங்கும் நிகழ்ச்சி சிங்களாந்தபுரத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா மகுடீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மகுடீஸ்வரன், முன்னாள் சேர்மன் எஸ்.கே.சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதேஸ்வரி சரவணன் (மோளப்பாளையம்), பரமேஸ்வரி ரவி (போடிநாயக்கன்பட்டி), சிங்களாந்தபுரம் அ.தி.மு.க. பிரமுகர்கள் பிள்ளார் செட்டியார், லோகநாதன், அரசு அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com