

இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு நிவாரணப் பொருட்கள், உதவித்தொகை மற்றும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கானப் பணி ஆணையை நேரில் சென்று வழங்கினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., தாசில்தார் செந்தில்குமார், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆ.பெ.வெங்கடேசன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வக்கீல் கே.சங்கர், ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாமண்டூர் சுப்பிரமணி உள்பட அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.