

பழனி:
பழனி திருவள்ளுவர் சாலையில் உழவர்சந்தை செயல்படுகிறது. இங்கு காலை, மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திருவள்ளுவர் சாலையோரம் ஆக்கிரமித்து ஏராளமான காய்கறி, பழக்கடைகள் வைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் போக்குவரத்து போலீசார், திருவள்ளுவர் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது ஏராளமான வியாபாரிகள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றி கொண்டனர்.