

திருவிடைமருதூர்,
கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய மாநாடு நடந்தது. மாநாட்டை கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட துணை செயலாளர் பாரதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குருசாமி, ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:- கும்ப கோணத்தில் உள்ள பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்களை கூடுதலாக நியமித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ரெயில் பாதை
தஞ்சாவூர்-விக்கிரவாண்டி இடையே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கும்பகோணம்- விருத்தாலம் இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.