

அதன்படி அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதம் 1-ந் தேதி வரையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம். அவ்வாறு ஆன்லைன் மூலமாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்சொன்ன தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
மேலும் கிண்டியில் இயங்கும் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 2014 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களும் இச்சலுகையை பயன்படுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.