

கம்மாபுரம்,
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தைச் சேர்ந்த சுமார் 30கும் மேற்பட்டவர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 5 மாதத்திற்கும் மேலாக முதியோர் ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனை கண்டித்து முதியவர்கள் பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதியவர்கள் நேற்று கம்மாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து விரைந்துச் சென்ற கம்மாபுரம் போலீசார் முதியவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.