மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆராய்ச்சியாளர் வேலை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 224 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆராய்ச்சியாளர் வேலை
Published on

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவிப் பொறியாளர், உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். உதவிப் பொறியாளர் பணிக்கு 73 இடங்களும், சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணிக்கு 60 இடங்களும் உதவியாளர் பணிக்கு 36 இடங்களும், தட்டச்சர் பணிக்கு 55 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு 1-1-2018-ந் தேதி அன்று 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு பெறுபவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சிவில், கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து, முதுநிலை என்விரான்மென்டல் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங், என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட், டெக்னாலஜி, பெட்ரோலியம் ரீபைனிங் படித்தவர்கள் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேதியியல், உயிரியல், தாவரவியல், உள்ளிட்ட சுற்றுச்சூழல், உயிரியல் தொடர்புடைய 12 விதமான அறிவியல் படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் சுற்றுச்சூழல் வஞ்ஞானி பணிக்கு விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்டப்படிப்புகளுடன், கணினி படிப்பில் சான்றிதழ் பெற்றவர்கள் உதவியாளர் பணிக்கும், பட்டப்படிப்புடன் தட்டச்சு சான்றிதழ், கணினி படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் தட்டச்சர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமாப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 31-ந் தேதியாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com