கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு; பணியாளர்கள் வேலை நிறுத்தம்

கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு; பணியாளர்கள் வேலை நிறுத்தம்
Published on

கமுதி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி என 627 கிளைகளும், அகில இந்திய அளவில் கிராமப்புற வங்கிகள் மொத்தம் 23,000 கிளைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கி கிளைகளில் 1 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கிராம வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, பென்சன் வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.

இதன்காரணமாக நாடு முழுவதும் 23,000 கிளைகள் மூடப்பட்டுஉள்ளதால் சுமார் ரூ.3,000 கோடி பண பரிவர்த்தனை, வர்த்தக இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கமுதி பகுதியில் பாண்டியன் கிராம வங்கி பணியாளர்கள் போராட்டத்தின் காரணமாக தகவல் அறியாத பொதுமக்கள் வங்கிக்கு வந்து காத்துக் கிடக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com