புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம்
Published on

தஞ்சாவூர்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பால்ராஜ் வரவேற்றார்.

மாநில பொதுச் செயலாளர் ரவி, மாநில பொருளாளர் மகாலிங்கம் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். மாநில துணைத் தலைவர் ராஜமோகன் தீர்மானம் வாசித்தார். கூட்டத்தில் அடுத்தமாதம்(பிப்ரவரி) 23-ந் தேதி கடலூரில் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடக்கிறது. ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தை மாதம்தோறும் நடத்தி ஓய்வூதியர்களின் குறைகளை களைய வேண்டும். ஓய்வூதிய பலன்களை எவ்வித காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.

புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார சட்ட முன்வடிவையும் ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

ஓய்வூதியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில செயலாளர் கோமதிநாயகம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com