

பாவூர்சத்திரம்,
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பொடியனூரை சேர்ந்தவர் டாக்டர் ரீட்டா ஹெப்சிராணி. இவர் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
தற்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் இவர் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை 35 நாட்கள் பணியாற்றினார். பின்னர் 6-ந் தேதி தேதி முதல் நேற்று முன்தினம் வரை தனிமைப்படுத்தப்பட்டு நேற்று அவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.
அங்கு அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வணிகர்கள், உறவினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருக்கு சந்தன மாலை, சால்வை அணிவித்து கைத்தட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லப்பா, டாக்டர் ஜான் செல்லையா, மக்கள் நல கமிட்டியை சேர்ந்த சிவ.ராமர், ஓய்வுபெற்ற ஆசிரியர் தாமோதரன், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், சண்முகநாதன் மற்றும் உறவினர்கள், ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.