

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 துணை வட்டாட்சியர்கள், 64 பணியிடங்களை பார்க்கும் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக வருவாய் நிர்வாக ஆணையர் தலையிட்டு துணை வட்டாட்சியர்கள் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சிவகுமார் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக மாவட்ட துணை தலைவர் ஜெயராமன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோனைகருப்பையா நன்றி கூறினார்.