ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு

நத்தம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு
Published on

நத்தம்:

நத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட சிறுகுடி ஊராட்சியில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர் முத்துமீனாள் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வெளியில் செல்லாமல் கண்காணித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தர வேண்டும். கிராமப்புறங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பின்னர் சிறுகுடி கண்மாய், பூசாரிபட்டி செல்வ விநாயகர் கண்மாய் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, தூர்வார உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, ஊராட்சி மன்ற தலைவர் கோகிலவாணி வீரராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் நத்தம் அண்ணா நகர், சாணார்பட்டி அருகே கணவாய்பட்டி ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வேலம்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளையும் மாநில ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.

முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 21 பேருக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com