2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி மூடைகள் - ஒன்றிய தலைவர் வழங்கினார்

திருப்பத்தூர் ஒன்றிய கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒன்றிய தலைவர் அரிசி மூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி மூடைகள் - ஒன்றிய தலைவர் வழங்கினார்
Published on

திருப்பத்தூர்,

கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தி.மு.க.வினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் வழங்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவுக்கு இணங்க முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில், திருப்பத்தூர் அருகே நேற்று கோட்டையிருப்பு, கருப்பூர், ஆலம்பட்டி, நாட்டார்மங்கலம், திருவுடையார்பட்டி, மாதவராயன்பட்டி, காக்காளிப்பட்டி, தேரேந்தல்பட்டி, கட்டையன்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அந்தந்த கிராமங்களுக்கே சென்று சமூக இடைவெளி கடைபிடிக்கபட்டு அனைவருக்கும் அரிசி மூடைகள் மற்றும் முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல் வழங்கினார். இதில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை, தாசில்தார் ஜெயலட்சுமி, ஆலம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திலகவதி பாண்டியன், திருவிடையார்பட்டி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் அகதிகள் முகாமில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

நெற்குப்பை சித்த மருத்துவர் ரத்தினதேவி, ஊராட்சி மன்றத்தலைவர் செந்தமிழ்செல்வி மதியழகன், துணை தலைவர் அருணகிரி, ஒன்றிய கவுன்சிலர் சுமதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை காரையூர் ஊராட்சி செயலர் ஜெயந்தி உள்பட ஊராட்சி மன்ற பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com