ரோபோவுக்கு ‘புழுவின் மூளை’

‘ரோபோ’ ஒன்றுக்கு புழுவின் மூளையை இணைத்துச் செயல்பட வைத்துச் சாதித்திருக்கிறார்கள், விஞ்ஞானிகள்.
ரோபோவுக்கு ‘புழுவின் மூளை’
Published on

உயிரினங்களின் மூளையில் இருந்து எலக்ட்ரானிக் சமிக்ஞைகள் உருவாக்கப்படுவது நமக்குத் தெரியும்.

இந்தச் சமிக்ஞைகள் கடத்தப்படுவதன் மூலமாகவே அனைத்துவகையான செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடிகிறது.

இந்நிலையில், மனித மூளையை கணினியுடன் இணைத்து இயங்கவைப்பது தொடர்பாக ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

அதைச் சாத்தியமாக்கும் வகையில் தற்போது வெற்றிகரமான முடிவு ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, கேனோர்ஹாப்டிடிஸ் எலிகன்ஸ் எனப்படும் உருளைப்புழு ஒன்றின் மூளையை சிறு ரோபோ வுடன் இணைத்து வெற்றிகரமாக விஞ்ஞானிகள் செயல்பட வைத்திருக்கிறார்கள்.

அதன்படி, புழுவின் மூளையில் உள்ள 302 நியூரான்கள் இணைக்கப்பட்டு மென்பொருளுடன் ஒத்திசைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு ஓபன்வார்ம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

செயற்கை தானியங்கிகளுடன் இயற்கை உயிரினங்களின் மூளையை இணைத்துச் செயல்பட வைக்கும் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com