ரோப்கார் பராமரிப்பு பணி நிறைவு

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணி நிறைவு அடைந்தது. இதை தொடர்ந்து நேற்று பெட்டிகளில் கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ரோப்கார் பராமரிப்பு பணி நிறைவு
Published on

பழனி:

பராமரிப்பு பணி

பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரையே விரும்புவார்கள். இயற்கை அழகை ரசித்தபடி 3 நிமிடத்தில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்வதால் ரோப்காரில் பக்தர்கள் விரும்பி செல்கின்றனர்.

இந்த ரோப்கார் பராமரிப்பு பணிக்காக தினமும் ஒரு மணி நேரம், மாதத்துக்கு ஒரு நாள், வருடத்துக்கு ஒரு மாதம் நிறுத்துவது வழக்கம். இந்த வருடத்துக்கான பராமரிப்பு பணிகள் கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி தொடங்கியது. அப்போது மேல்தளம் மற்றும் தரைத்தளத்தில் உள்ள உதிரி பாகங்கள் மற்றும் கம்பி வடம், பெட்டிகள் அகற்றப்பட்டன. இதையடுத்து புதிய சாப்ட்டு கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. பின்னர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் இருந்து ரூ.6 லட்சத்தில் புதிய கம்பி வடம் வாங்கப்பட்டு பொருத்தப்பட்டது. பின்பு நேற்று பெட்டிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.

சோதனை ஓட்டம்

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஒவ்வொரு பெட்டியிலும் 270 கிலோ கற்கள் வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனை ஓட்டத்தின்போது வேறு ஏதும் பிரச்சினைகள் உள்ளதா? என அதிகாரிகள் கண்காணித்தனர்.

அதிகாரிகள் இயக்கலாம் என்று கூறியதும், பக்தர்கள் பயன்பாட்டுக்காக ரோப்கார் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com