ரெயில், பஸ் நிலையங்களில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி - போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு

புதுவை ரெயில், பஸ் நிலையங்களில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
ரெயில், பஸ் நிலையங்களில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி - போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு
Published on

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவை புதிய பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்காக போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் ஒருமுறை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் வாடகை வாகன ஓட்டுநர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். அவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்கவேண்டும். அது சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரியின் கடமையாகும். இதற்கு ஐ.ஆர்.பி. போலீசாரையும் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் இருப்பது இப்போதைய தேவையாகிறது. அவ்வாறு பணியில் இருப்பவர்களின் பெயர்களை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இதனை காவல்கட்டுப்பாட்டு அறையின் தலைவரான பாஸ்கர் உறுதி செய்ய வேண்டும்.

இரவு நேரத்தில் பயணிகளை தனியாக விடமுடியாது. நகரின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பினை உறுதி செய்ய இது அவசியமாகிறது.

இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com