

செஞ்சி,
செஞ்சி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அலுவலர் ஜானகிராமன், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் காவலர்கள் முருகன், நாராயணன் ஆகியோர் அவலூர்பேட்டை மங்களம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திருவண்ணாமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது, ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 150 இருந்தது. இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலையை சேர்ந்த மொத்த வியாபார உரக்கடையில் பணிபுரியும் ஜெயசீலன் என்பவதும், செஞ்சி பகுதியில் உள்ள கடைகளில் வசூல்செய்த பணத்தை எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. எனவே அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.