சேலம் விமான நிலையத்திற்கு ரூ.10 கோடியில், 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள்

ரூ.10 கோடியில், 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள்
சேலம் விமான நிலையத்திற்கு ரூ.10 கோடியில், 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள்
Published on

ஓமலூர்:

சேலம் விமான நிலையத்திற்கு ரூ.10 கோடியில் 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிநவீன தீயணைப்பு வாகனங்கள்

ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியில் சேலம் விமான நிலையம் இயங்கி வருகிறது. சென்னையில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் நாள்தோறும் தனியார் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சேலம் விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான அதிநவீன 2 தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அதிநவீன தீயணைப்பு வாகனத்தின் சிறப்புகள் பற்றி விமான நிலைய இயக்குனர் ரவீந்திரசர்மா கூறியதாவது:-

சேலம் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் இயக்கப்படுகிறது. ஆனால் வரும் காலத்தில் பெரிய ரக விமானம் வந்தாலும் பாதிப்பு என்றால் பாதுகாக்கும் வகையில் அதிநவீன 2 தீயணைப்பு வாகனங்கள் சேலம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ரூ.10 கோடி

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த 2 தீயணைப்பு வாகனங்கள் ரூ.10 கோடி மதிப்பிலானது. தீயணைப்பு வாகனம் 40 நிமிடங்களில் 120 கிலோ மீட்டர் வேகம் வரை தண்ணீர் செல்லக்கூடிய வகையில் தீயை அணைக்க அக்குவா பிலிம் பார்மேஷன் போம் என்ற வேதிபொருள் கலந்து 360 டிகிரி கோணத்தில் நான்குபுறமும் தண்ணீரை சுழன்று அடிக்கும் வல்லமை உடையது. இந்த வாகனம் அனைத்தும் எலக்ட்ரானிக் தானியங்கி சிஸ்டத்தில் இயங்க கூடியது. மேலும் இவற்றில் உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தீத்தொண்டு வாரத்தையொட்டி, தீ விபத்தை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு இலக்கை அடைதல், உயிர் காக்கும் கருவி பயன்படுத்துதல், தீ காப்பு உடை அணிவது, தீயணைப்பு விழிப்புணர்வு கட்டுரை, பழமொழி போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தீயணைப்பு படையினருக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

முன்னதாக, சேலம் விமான நிலையத்தில் விமானம் தீப்பற்றிக்கொண்டால் அணைப்பது குறித்து அதிநவீன தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், விமான நிலைய இயக்குனர் ரவீந்திர சர்மா, விமான நிலைய தகவல் தொடர்பு உதவி பொது மேலாளர் ரமேஷ், விமான நிலைய சிவில், எலக்ட்ரிக்கல் உதவி பொது மேலாளர் சுஜாதா, விமான நிலைய தீயணைப்பு துறை உதவி மேலாளர் தியாகராஜன் மற்றும் விமான நிலைய குழு ஆணையத்தின் பணியாளர்கள், ட்ரூஜெட் விமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com