விவசாயிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நவீன எந்திரங்கள் - வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

விவசாயிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நவீன எந்திரங்கள் வழங்கப் படும் என வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி கூறினார்.
விவசாயிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நவீன எந்திரங்கள் - வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
Published on

கரூர்,

கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அரவை முருங்கை கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறு வனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு, அதன் தலைவர் ஈசநத்தம் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி கலந்து கொண்டு பேசுகையில், அரவக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவ ட்டார பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. எனவே முருங்கை பவுடர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பதில் விவசாயிகள் முன்வர வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி 125 குழுக்கள் அமைத்து ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன வேளாண் எந்திரங்கள் விரைவில் வழங்கப்படும். இதனால் விவசாய பணிகள் எளிமை யாவதோடு, பயிர் உற்பத்தியை பெருக்கலாம், என்றார்.

இந்த கூட்டத்தில், கரூர் மாவட்டத்திலுள்ள முருங்கை விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளித்து முருங்கை உற்பத்தியை பெருக்க வேண்டும். உற்பத்தி அதிகமாகிற சமயத்தில் முருங்கை காய்களை பதப் படுத்துவதற்கு ஏதுவாக அரவக்குறிச்சி மற்றும் உப்பிட மங்கலத்தில் முருங்கை காய்களை பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும். முருங்கை பவுடர் தொழிற்சாலையை அரவக்குறிச்சியில் ஏற்படுத்த வேண்டும். பனை விதைகளை அதிகளவு நடவு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பனை மரங்கள் வெட்டப் படுவதை தடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க ஊருக்கு ஒரு ஆலமரம் மற்றும் வேம்பு வைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் வளர்மதி, தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் நடராஜன், அரவக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) தண்டபாணி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com