

ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் சாலையில் காவனூர் அருகே சென்ற போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த ராணி உயிரிழந்தார். இதையடுத்து ரூ.60 லட்சம் இழப்பீடு கோரி ராணியின் கணவர் தாமோதரன், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.வேல்ராஜ், மனுதாரருக்கு நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக 19 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.