

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட விம்கோ நகர் ராமநாதபுரம் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் ஏற்கனவே இருந்த குட்டையை சீரமைத்து மழைநீர் தேங்கி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் நீர் வளம் பெறுவதற்கும், நிலத்தடி நீர் மாசுபடாமல் இருப்பதற்கும் குளமாக மாற்றி சீரமைக்கப்பட்டது.
அதனை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கான நடைபாதையும், சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டது. இந்த நடைபாதை பூங்கா மற்றும் குளத்தை வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், சொக்கலிங்கம், தினேஷ் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.