வேப்பனப்பள்ளி அருகே நேரலகிரியில் காரில் கொண்டு வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்

வேப்பனப்பள்ளி அருகே நேரலகிரியில் காரில் கொண்டு வந்த ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேப்பனப்பள்ளி அருகே நேரலகிரியில் காரில் கொண்டு வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்
Published on

கிருஷ்ணகிரி,

வேப்பனப்பள்ளி அருகே நேரலகிரி சோதனைச்சாவடியில் நேற்று பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.2 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது காரில் வந்தவர் துணி வியாபாரி என்பதும், அந்த பணத்தை ஆவணங்கள் இன்றி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என தெரிவித்தனர்.

கடந்த 27-ந் தேதி முதல் நேற்று வரை 6 சட்டசபை தொகுதிகளிலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.38 லட்சத்து 29 ஆயிரத்து 240 மற்றும் ரூ.6 லட்சத்து 39 ஆயிரத்து 900 மதிப்பிலான 6,319 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். இதில், உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதையடுத்து ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 600 விடுவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com