ரூ.2 லட்சம், சேலைகளை லஞ்சமாக வாங்கிய கூட்டுறவு சங்க அதிகாரி உள்பட 2 பேர் கைது

ரூ.2 லட்சம், சேலைகளை லஞ்சமாக வாங்கிய கூட்டுறவு சங்க அதிகாரி உள்பட 2 போ கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.2 லட்சம், சேலைகளை லஞ்சமாக வாங்கிய கூட்டுறவு சங்க அதிகாரி உள்பட 2 பேர் கைது
Published on

மும்பை,

மும்பையை சோந்த ஒருவர் கட்டிட சங்க நிதியை பயன்படுத்தி தனது கட்டிடத்தை பழுதுபார்க்க விரும்பினார். இதற்காக அவர் கூட்டுறவு சங்க துறையில் அனுமதி கேட்டு இருந்தார்.

கட்டிடத்தை பழுது பார்க்க அனுமதி கொடுக்க கூட்டுறவு சங்ககளின் துணை பதிவாளர் பாரத் காக்கட் ரூ.2 லட்சம், 2 சேலைகளை கேட்டு உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

பின்னர் அவர் ரூ.2 லட்சம், சேலைகளை கூட்டுறவு சங்க அதிகாரியை சந்தித்து கொடுத்தார். அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் பணம், சேலையை லஞ்சமாக வாங்கிய அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சச்சின் காக்கட் என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com