புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.2¼ லட்சம் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்

புயல் பாதித்த பகுதி களுக்கு ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் அனுப்பி வைத்தார்.
புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.2¼ லட்சம் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்
Published on

கடலூர்,

கஜா புயலால் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்ட ஓட்டல் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கைலி, சேலை, போர்வை போன்றவற்றை செயலாளர் ஆனந்தபவன் நாராயணன், ராம்கி நாராயணன், தலைவர் ரெங்கராஜன், தேவி ஓட்டல் முருகன், வசந்தபவன் ஓட்டல் மகேந்திரன், துரை ஓட்டல் ரவி, மாஸ்டர் பேக்கரி உரிமையாளர் ராஜா ஆகியோர் கலெக்டர் அன்புசெல்வனிடம் வழங்கினர்.

இதேபோல் கடலூர் கே.வி.டெக்ஸ் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள துணிகள், சுமங்கலி சில்க்ஸ் சார்பில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை அதன் உரிமையாளர்கள் வெங்கடேஸ்வரன், நிஸ்டர் அலி ஆகியோர் கலெக்டரிடம் வழங்கினர். இதையடுத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள துணிமணிகளையும், ஏற்கனவே சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட் களும் மாவட்ட வளர்ச்சி மன்ற அலுவலகத்திலிருந்து வாகனத்தில் ஏற்றப்பட்டது.

இதை கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து அ அனுப்பி வைத்தார். அப்போது சப்-கலெக்டர் சரயூ உடனிருந்தார். இந்த நிவாரண பொருட்கள் நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு செல்லப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com