

மும்பை,
மும்பை புலேஷ்வர் ஸ்ரீ ஜிபவன் என்ற கட்டிடத்தில் தொழில் அதிபர் நவின் பட்டேல் என்பவரது அலுவலகம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் அலுவலகத்தில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்த 3 பேர் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அவர்கள் கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களை காட்டி மிரட்டி பீரோவின் சாவியை தருமாறு நவின் பட்டேலிடம் கேட்டனர். இதனால் பயந்து போன அவர் சாவியை கொடுத்தார். பின்னர் கொள்ளையர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.20 லட்சத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.