கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சம் வாடகை பாக்கி; 7 கடைகளுக்கு ‘சீல்’

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த கடைக்காரர்களுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கியும் வாடகை செலுத்தாதால் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சம் வாடகை பாக்கி; 7 கடைகளுக்கு ‘சீல்’
Published on

சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலைய வளாகத்தில் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இதில் சில கடைகளை ஆம்னி பஸ் புக்கிங் அலுவலகமாக நடத்தி வருகின்றனர். அதில் 7 கடைகளுக்கு சில வருடங்களாக வாடகை தராமல் ரூ.35 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. வாடகை பாக்கியை செலுத்தும்படி கடைக்காரர்களுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கியும் வாடகையை செலுத்தவில்லை.

இதையடுத்து வாடகை பாக்கி வைத்திருந்த 7 கடைகளுக்கு நேற்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர். வாடகை பாக்கியை முழுமையாக செலுத்திய பிறகு கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com