சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.35 லட்சம் பறிமுதல்: ரெயில்வே போலீசார் விசாரணை

ஊரடங்கு காரணமாக வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரெயில்கள் மூலம் மதுபான பாட்டில்கள் கடத்தப்படுகிறதா என்பதை ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்புப்படையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.35 லட்சம் பறிமுதல்: ரெயில்வே போலீசார் விசாரணை
Published on

அந்த வகையில் சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஐதராபாத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் 4-வது நடைமேடையில் நின்றது. அதில் இருந்து இறங்கிய நபரை சந்தேகத்தின் பேரில் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் விசாரித்தனர். பின்னர் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அந்த பணம் குறித்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த பஞ்சுமார்தி சுப்பாராவ் (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும், அவர் கொண்டு வந்த பணத்துக்கு எந்த ஒரு உரிய ஆவணமும் இல்லாததால், அந்த பையில் இருந்த ரூ.34 லட்சத்து 94 ஆயிரத்தை வருமான வரித்துறை அதிகாரியிடம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com