விஜயாப்புரா அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.60 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.
விஜயாப்புரா அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.60 லட்சம் பறிமுதல்
Published on

பெங்களூரு,

விஜயாப்புரா அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், விஜயாப்புரா மாவட்டம் இன்டி தேசிய நெடுஞ்சாலையில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு, அங்கு வரும் வாகனங்களை நேற்று காலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு காரில் சோதனை நடத்தப்பட்டது. அந்த காரின் பின்பக்க இருக்கையில் இருந்த ஒரு பையில் ரூ.60 லட்சம் இருந்தது. அதுகுறித்து காரில் இருந்த 2 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். முதலில் அவர்கள் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொன்னார்கள். பின்னர் அந்த பணம் தனியார் வங்கிக்கு சொந்தமானது என்று கூறினார்கள். ஆனால் அதற்கான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.

அதே நேரத்தில் அவர்கள் வந்த காரும் தனியார் வங்கிக்கு சொந்தமானது அல்ல, வாடகை கார் என்பது தெரிந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ரூ.60 லட்சமும், அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கார் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இன்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் விஜயாப்புராவில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com