வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
Published on

திருச்சி,

திருச்சி வயலூர் சாலை சீனிவாசா நகர் 8-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 62). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி காந்திமதி. இவர்கள் நேற்று முன்தினம் இரவு தங்களது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். காலையில் கண் விழித்து பார்த்த போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் இன்னொரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு போயிருந்தது. நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணத்தை திருடிச்சென்று உள்ளனர். இதுபற்றி நாகராஜன் புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அரசு ஆஸ்பத்திரி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com