

அப்போது பெண்கள் விளக்கேற்றி, வெற்றி திலகமிட்டு வேட் பாளர் முருகேசனை வரவேற்றனர்.
பின்பு அவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு ராக்கெட் போல் ஏறி வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்களை கட்டுகிறது. கிராமப்புற மாணவர்கள் டாக்டர்களாக முடியவில்லை.இவைகளுக்கெல்லாம் காரணம் தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க.தான். தமிழ் நாட்டை டெல்லியில் அடகு வைத்து விட்டனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.12-க்கு வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலையை உருவாக்கி உள்ளனர். தமிழக மக்களுக்காக எப்போதும் போராடும் இயக்கம் தி.மு.க.தான்.
தி.மு.க. ஆட்சியில் தான் சமத்துவபுரங்கள், திருமண உதவித் தொகை, வீடு இல்லாதவர்களுக்கு இலவச நிலம், இலவச கலர் டி.வி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. தற்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்வதைத்தான் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு செய்கிறது. உங்கள் வாக்கு களை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்தால் 100 நாள் வேலை 150 நாட்களாகும். ஏழை விவசாயிகள் மின் மோட்டார் வாங்க மானியம் வழங்கப்படும்.30 வயதுக் குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை தி.மு.க. அரசே ஏற்றுக்கொள்ளும். பரமக்குடி தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும்.
இவ்வாறு பேசினார்.
அவருடன் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திசைவீரன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜ், முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், முன்னாள் மாநில இளைஞ ரணி துணை அமைப் பாளர் சம்பத், மாநில தீர்மானக் குழுதுணைத் தலைவர் திவாகர், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் வளைய னேந்தல் சந்திரசேகர், ராமு யாதவ் உள்பட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் வாக்குகள் சேகரித்தனர்.