கர்ப்பமாக இருப்பதாக வதந்தி நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. 43 வயதான இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளான்.
கர்ப்பமாக இருப்பதாக வதந்தி நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்
Published on

மும்பை,

ஷில்பா ஷெட்டி மும்பையில் உள்ள மருத்துவ பரிசோதனை நிலையத்தில் இருந்து வெளியேறுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அவர் கர்ப்பமாகி இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

இந்தநிலையில் டுவிட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்த ஷில்பா ஷெட்டி, தனது உடல்நிலைக்கு எதுவும் ஆகவில்லை எனவும். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கே தான் சென்று வந்ததாகவும் விளக்கம் அளித்தார். மேலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுவதையும் அவர் மறுத்தார். எந்தவொரு நோயும் வரும் முன் காப்பதே சிறந்தது என அவர் தனது ரசிகர்களுக்கு வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com