25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
Published on

திண்டுக்கல்,

ஊராட்சி செயலாளர் களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதுவாழ்வு திட்ட பணியிடங்களை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் களுக்கு வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு பாரபட்சமின்றி ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்யக்கூடாது.

மேலும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்பட 25 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம், வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். எனினும், அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து நேற்று மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக வளர்ச்சித்துறையில் 960 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் நேற்றைய தினம் சுமார் 750 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகம் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து விதமான பணிகளும் பாதிக்கப்பட்டன.

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சிதுறை மாவட்ட துணைத்தலைவர் சக்தி வடிவேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சுமதி, பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com