ஊராட்சி அலுவலகத்தை ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகை

பழனி அருகே ஊராட்சி அலுவலகத்தை ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஊராட்சி அலுவலகத்தை ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகை
Published on

பழனி:

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சுமார் 50 பேர் கணக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கணக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படவில்லை.

இதனால் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

எனவே வேலை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com