“தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது” நாஞ்சில் சம்பத் பேட்டி

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது என நஞ்சில் சம்பத் கூறினார்.
“தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது” நாஞ்சில் சம்பத் பேட்டி
Published on

முளகுமூடு.

சட்டமன்ற கூட்ட தொடரில் சரவணன் எம்.எல்.ஏ. வீடியோ பேச்சை வைத்து கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானம் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தபோது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என சபாநாயகர் மறுத்தார். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கலைக்க வேண்டும் என்று கூச்சல் போடுகிறார். ஆட்சியை கவிழ்ப்பது தான் அவரது நோக்கம்.

தினகரனால் மட்டுமே மாற்றம்


ஜீவாதார பிரச்சினைகளை விவாதிக்காமல் டேப் விவகாரத்தை வைத்து கொண்டு ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் செயல்படுவதை பொதுமக்கள் விரும்பவில்லை. எந்த குளத்தில் மூழ்கியாவது முதல்அமைச்சராக வேண்டும் என கனவு காணும் ஸ்டாலினால் தி.மு.க.வுக்கும், தமிழகத்திற்கும் லாபம் இல்லை.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தினகரனை ஏற்றுக் கொள்ளும் நிலைமை வரும். திராவிட இயக்கம், தமிழகத்தின் திசையை தீர்மானிக்கும் தலைவராக தினகரன் வளருகிறார். தமிழகத்திற்கு தினகரனால் மட்டும்தான் மாற்றம் சாத்தியம்.

பா.ஜனதா காலூன்ற முடியாது


தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது. அதற்கு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com