ஏரிக்குப்பம் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா: உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி செயல் அலுவலர் தகவல்

ஏரிக்குப்பம் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி என்று செயல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
ஏரிக்குப்பம் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா: உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி செயல் அலுவலர் தகவல்
Published on

கண்ணமங்கலம்,

சந்தவாசல் அருகே ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.22 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நேற்று நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.

இன்று அதிகாலை 3 மணியளவில் சனிப்பெயர்ச்சி ஹோமத்துடன், 4 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் புனித நீர் அபிஷேகம், அலங்காரம் செய்து 5.22 மணிக்கு மகாதீபாராதனை நடக்கிறது.

இந்த விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இந்த நிலையில் உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி உள்ளூர் மக்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய காலை 9 மணிவரை அனுமதி வழங்கியுள்ளதாகவும், தீர்த்தக்குளத்தில் குளிக்கவும், தீபம் ஏற்றவும் அனுமதியில்லை எனவும் செயல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

பக்தர்கள் தரிசனம்

இந்த நிலையில் நேற்று கோவில் வளாகத்தில் உள்ளூர் பக்தர்கள் இலவச மற்றும் கட்டண தரிசனம் செய்வதற்கு வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணியை செயல் அலுவலர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

நேற்று சனிக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தீர்த்தக்குளத்தில் புனித நீர் தெளித்துக்கொண்டு, தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் சாலையின் அருகே உள்ள ஏரியில் இருந்து கசிவுநீர் வெளியேறுவதால் சேறும் சகதியுமாக சாலை காணப்படுகிறது. இதனை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com