காஞ்சீபுரம் மாவட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
Published on

கல்வி உதவித்தொகை

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம், 2021-2022-ம் கல்வியாண்டுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிப்பதற்காக கடந்த 6-ந்தேதி இணையதளம் திறக்கப்பட்டு, 10.2.2022 இறுதி நாள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

10-ந்தேதிக்குள்

ஆகவே தகுதியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து ஜாதி சான்று, வருமான சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களுடன் அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com