வாலாஜாபாத்தில் பள்ளி மேலாண்மை குழு

வாலாஜாபாத்தில் பள்ளி மேலாண்மை குழுவை காஞ்சீபுர மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
வாலாஜாபாத்தில் பள்ளி மேலாண்மை குழு
Published on

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முன்னேற்றத்திற்காகவும் பள்ளிகள் செயல்பாடுகளையும் மேலாண்மை செய்வதற்கும் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-பள்ளி மேலாண்மை குழு அமைக்க தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி காஞ்சீபுரத்தை அடுத்த வாலாஜாபாத் கல்வி வட்டத்தின் கீழ் இயங்கிவரும் களியனூர் அரசு நடுநிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பெற்றோர்கள் மாணவர்களிடையே பள்ளி மேலாண்மைக் குழுவினர் அதன் செயல்பாடுகள் பள்ளி மேலாண்மைகுழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெற உள்ள மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வு அதன் மறு கட்டமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து எளிய முறையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலாண்மை குழுவில் 50 சதவீத பெண்களும் தலைவராக பள்ளியில் பயிலும் மாணவர்களின் தாயார் இருப்பார் எனவும், துணைத்லைவராக பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவியின் பெற்றோர் இருப்பார்கள். இந்த குழுவில் ஆசிரியர்களின் பங்கு 25 சதவீதம் இருக்கும் எனவும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சுய உதவி குழு உறுப்பினர், தன்னார்வலர்கள் என மொத்தம் 20 உறுப்பினர்கள் உள்ளனர். இதன் மூலம் பள்ளி கட்டமைப்பு ஆசிரியர் பணியிடங்களை நிறைவு செய்தல், நடவடிக்கை எடுத்தல், பள்ளியின் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து இந்த குழு கூடி நடவடிக்கை எடுக்கும். மேலாண்மை குழு உறுப்பினர்களில் 75 சதவீதம் அதாவது 15 உறுப்பினர்கள் பெற்றோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளி மாணவ மாணவியர்கள் கல்வி கற்க நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், வட்ட கல்வி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவி வடிவுக்கரசி ஆறுமுகம், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com